/* */

ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் மாயம்

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளித்த கேட்டரிங் மாணவன் நீரில் மூழ்கி மாயமானார்.

HIGHLIGHTS

ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் மாயம்
X

கரூரில் காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கிய கல்லூரி மாணவர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழனியப்பா ஆயில் மில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அரவிந்தன் (17). இவர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவரது சித்தப்பா விவேக் ( 30), அரவிந்தனின் மாமன் மகன் கௌதம் (17 )ஆகிய 3 பேரும் பரமத்தி வேலூர் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக வந்துள்ளனர். காவிரி ஆற்றுப் பாலத்தின் அடியில் காரை நிறுத்திவிட்டு மூன்று பேரும் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அரவிந்தன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தார். பின்னர் அரவிந்தனை பார்த்தபோது காணவில்லை. நீண்ட நேரம் தேடிப் பார்த்தோம் கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து அரவிந்தனின் சித்தப்பா விவேக் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றுப் பகுதிக்கு விரைந்து வந்து பிளாஸ்டிக் படகு மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர். இரவு நேரமானதால் தேடுதல் முயற்சி நிறுத்தப்பட்டது. மீண்டும் நாளை காலை தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மூழ்கிய மாணவன் உடலை தேட உள்ளனர்.

Updated On: 4 July 2021 4:40 PM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
 2. லைஃப்ஸ்டைல்
  பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
 3. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 4. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 5. லைஃப்ஸ்டைல்
  நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
 6. கும்மிடிப்பூண்டி
  குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
 7. ஈரோடு
  சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
 8. லைஃப்ஸ்டைல்
  முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
 9. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 10. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்