லாரி மோதி மாணவி உயிரிழப்பு - காவல் ஆய்வாளர் வாகனம் முற்றுகை

லாரி மோதி  மாணவி உயிரிழப்பு - காவல் ஆய்வாளர் வாகனம் முற்றுகை
X

கரூர் அருகே பவுத்திரம் என்ற அருகே லாரி மோதிய விபத்தில் 9 ம் வகுப்பு பள்ளி மாணவி பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.லாரி ஓட்டுனரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் காவல்துறை வேனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பவுத்திரம் புன்னம்சத்திரம் சாலையில் பவுத்திரத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா என்ற ஒன்பதாவது படிக்கும் மாணவி அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு பால் பண்ணைக்கு இரு சக்கர் வாகனத்தில் சென்றார். அப்போது, அந்த வழியாகச் சென்ற பவித்திரத்தில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் கம்பெனியின் லாரி மாணவியின் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவி தலையில் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தையடுத்து, லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் அதனடிப்படையில் க. பரமத்தி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது சய்ய கோரி பரமத்தி காவல் ஆய்வாளர் ஜீப்பை செல்லவிடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பிறகு க.பரமத்தி காவல் ஆய்வாளர், பொதுமக்களிடம். சமாதானம் செய்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது கைதுஙசெய்யப்படுவார் என உறுதியளித்ததையடுத்து முற்றுகை போராட்டம் கை கைவிடப்பட்டது.




Tags

Next Story
ai based agriculture in india