/* */

மலைகிராம மாணவர்ளுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் கயல்வழி

மலைகிராமங்களில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடங்களை நினைவுபடுத்தும் பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் கயல்வழி தெரிவித்தார்.

HIGHLIGHTS

மலைகிராம மாணவர்ளுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் கயல்வழி
X

கரூரில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆய்வு்செய்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு நிகழாண்டுக்கான புத்தகங்களை வழங்கினார்.

மலைகிராமங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் கல்வியை மறந்திடாமல் இருக்க மாணவர்களது இல்லங்களுக்குச் சென்று பாடங்களை நினைவுப்படுத்துவதும் திட்டமும் செயல்படுத்தப்படுவதாக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

தமிழக ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்வழி செல்வராஜ் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கரூர் மாவட்டத்தை பொருத்தவரை ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 29 பள்ளிகளும், 19 விடுதிகளும் உள்ளன. இதில் 2,206 படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 12,952 பேருக்கு கல்வி உதவித் தொகையாக 4 கோடியே 62 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில மாணவர் சேர்க்கை மிக குறைவாக உள்ளது. இது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 30 ஆண்டு பழமையான கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கொல்லிமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் செல்போன் சிக்னல் குறைவாக உள்ளதால், மாணவர்கள் கல்வி கற்பதற்கு சிரமமாக உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து செல்போன் சர்வீஸ் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம், விரைவில் இந்த குறையை சரி செய்யப்படும். மலைகிராமங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் கல்வியை மறந்திடாமல் இருக்க அரசு மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று பாடங்களை நினைவுப்படுத்துவதும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

Updated On: 15 July 2021 4:45 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  பெரியாறு அணை போராட்டக்களத்தில் இறங்கிய தமிழக நிருபர்கள்..!
 2. லைஃப்ஸ்டைல்
  திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
 3. லைஃப்ஸ்டைல்
  உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
 4. லைஃப்ஸ்டைல்
  வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
 5. லைஃப்ஸ்டைல்
  முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
 6. இந்தியா
  மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
 7. லைஃப்ஸ்டைல்
  வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
 8. லைஃப்ஸ்டைல்
  சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
 9. உலகம்
  வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
 10. விளையாட்டு
  கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி