/* */

கலப்பட டீசல் 1,000 லிட்டருடன் டேங்கர் லாரி பறிமுதல்: ஒருவர் கைது

கலப்பட டீசல் விற்க முயன்றவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கலப்பட டீசல் 1,000 லிட்டருடன் டேங்கர் லாரி பறிமுதல்: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட ஆகாஷ்.

கரூரில் கலப்பட டீசல் விற்கப்படுவதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தாராபுரம் சாலையில் உள்ள காசிபாளையம் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்றில் 1000 லிட்டர் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த லாரியில் இருந்த கலப்பட டீசலை விற்க முயன்ற ஆகாஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 1000 லிட்டர் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
 2. லைஃப்ஸ்டைல்
  உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
 3. லைஃப்ஸ்டைல்
  வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
 4. லைஃப்ஸ்டைல்
  முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
 5. இந்தியா
  மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
 6. லைஃப்ஸ்டைல்
  வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
 7. லைஃப்ஸ்டைல்
  சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
 8. உலகம்
  வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
 9. விளையாட்டு
  கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
 10. வணிகம்
  நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!