பள்ளி மாணவி மாயம்:போலீசார் விசாரணை

பள்ளி மாணவி மாயம்:போலீசார் விசாரணை
X

பைல் படம்.

குந்தாணிபாளையத்தில் பள்ளி சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம் அருகே குந்தாணிபாளையம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (42) கட்டிட தொழிலாளி. இவருடைய இரண்டாவது மகள் நொய்யல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை, மகளை பள்ளியில் விட்ட சங்கர் மாலை அவரை அழைத்து வர சென்றுள்ளார். ஆனால், மகள் பள்ளியில் இல்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!