அரவக்குறிச்சி: இருசக்கர வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

அரவக்குறிச்சி: இருசக்கர வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
X

கோப்பு படம்

அரவக்குறிச்சி அருகே, இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, வேலாயுதம்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் துரைசாமி (70). இவர் கடந்த 13 ம் தேதி மூன்று சக்கர கைமிதி வண்டி சைக்கிளில், கரூர் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சேலம் பைபாஸ் சாலையில், தூளிப்பட்டி அருகே சென்றபோது, பின்னால் மண்மங்கலம் சமத்துவபுரத்தை சேர்ந்த கோபி(36) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும், கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் துரைசாமி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!