கரூரில் ராஜீவ்காந்தி 30வது நினைவு நாள்: காங்கிரசார் மலரஞ்சலி

கரூரில்  ராஜீவ்காந்தி 30வது நினைவு நாள்:  காங்கிரசார் மலரஞ்சலி
X

கரூரில் ராஜீவ் காந்தி நினைவு நாளில் அவரது உருவ படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள். 

கரூரில் ராஜீவ் காந்தியின் 30வது நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னள் பிரதமரும், காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவருமான ராஜீவ்காந்தியின் 30வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கொரானா பரவல் காரணமாக மிக எளிமையான முறையில் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி தலைமையில், கட்சியின் நிர்வாகிகள் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டு ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தொண்டர்களும் ராஜீவ்காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!