சினிமா பாணியில் கன்டெய்னர் லாரி கடத்தல் துரத்தி பிடித்த போலீசார்

சினிமா பாணியில் கன்டெய்னர் லாரி கடத்தல் துரத்தி பிடித்த போலீசார்
X

 கரூரில் கடத்தப்பட்டு போலீசாரால் விரட்டி மீட்கப்பட்ட லாரி.

சினிமா பாணியில் கன்டெய்னர் லாரியை விரட்டிச் சென்று போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் கன்டெய்னர் லாரியை கடத்திய எடப்பாடியை சேர்ந்த பலே திருடனை சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் வேல்சக்கய்யா (49) கன்டெய்னர் லாரி ஓட்டுனர். தர்மபுரியிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஊறுகாய் பெட்டிகளை கன்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு கரூர் வழியாக சென்றார். கரூரில் ஆட்டையம்பரப்பு என்ற இடத்தில் கன்டெய்னர் லாரியை டீக்கடை ஓரமாக நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தார்.

லாரி இன்ஜின் ஓடிக் கொண்டிருந்த நிலையில் அப்பொழுது திடீரென வாகனத்தை மர்ம நபர் ஒருவர் இயக்கி வேகமாக ஓட்டிச் சென்றார். செய்வதறியாது திகைத்த லாரி ஓட்டுநர் டீக்கடை உரிமையாளர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் அளித்தார். ரோந்து போலீசார் கன்டெய்னர் லாரியை விரட்டி சென்று புத்தாம்பூர் ஜவுளிபூங்கா அருகே மடக்கிப் பிடித்தனர்.

மேலும், லாரியை திருடிச் சென்ற சேலம் மாவட்டம்,எடப்பாடி அருகே உள்ள சின்னத்தாம்பட்டி ராம்ஜத்மலானி (எ) ராமமூர்த்தி (27) என்ற இளைஞரை தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சினிமா பாணியில் கன்டெய்னர் லாரியை விரட்டிச் சென்று போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future