தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; பாெதுமக்கள் ஆர்வம்

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; பாெதுமக்கள் ஆர்வம்
X

க.பரமத்தி பகுதியில் நடைபெற்று வரும் தமிழக அரசின் சாதனை விளக்க புபைப்பட கண்காட்சியை  ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கரூரில் நடைபெற்று வரும் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

க.பரமத்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் விவரங்கள் ஆகியவை புகைப்படங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த புகைப்பட கண்காட்சியை க.பரமத்தி பகுதியில் வசிக்கும் மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Tags

Next Story
ai marketing future