ஆத்துபாளையம் நீர்தேக்கம் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
நொய்யல் நீர் தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தண்ணீரை திறந்து வைக்கிறார்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கார்வழி கிராமம் ஆத்துப்பாளையம் என்ற இடத்தில், 163 ஏக்கர் பரப்பளவில் நீர்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு மற்றும் கீழ் பவானி பாசன வாய்க்கால் கசிவு நீர் மூலம், ஆத்துப் தண்ணீர் கொண்டு செல்ல, பிரதானகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சூர், துக்காட்சி, கார்வழி, தென்னிலை, மண்மங்கலம், தோட்டக்குறிச்சி, புஞ்சைபுகழூர் பஞ்சமாதேவி ஆகிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசன வசதி பெறும். கடந்த, 2019ல் மழை காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் முழு கொள்ள்ளவான, 26.9 அடியை தண்ணீர் எட்டியது. இதனால் அணை யிலிருந்து நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையில் பாளையம் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று அதிககாலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 100 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 26.17 அடியாக இருந்தது. தண்ணீர்வரத்து அதிகரித்தால் இன்று அதிகாலை அணை நிரம்பியது.
இதையடுத்து பாசன தேவைக்காக நொய்யல் வாய்க்காலில் தண்ணீரை அணையிலிருந்து தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மலர்தூவி திறந்து வைத்தார். இதன் மூலம் 20 கிராமங்களில் உள்ள 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், சுமார் 20 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாகவும் வரும் காலங்களில் தமிழக முதல்வரின் உத்தரவை பெற்று விவசாயிகளுக்கு பயனடையும் வகையில் இந்த அணையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மொஞ்சனூர் இளங்கோ, சிவகாமி சுந்தரி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu