கரூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு; 20 பேர் காயம்

கரூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு; 20 பேர் காயம்

தேனீக்கள் இருந்த மரத்தை பார்வையிடும் தீயணைப்புத் துறை வீரர்கள்

100 நாள் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்; 20 பேர் காயமடைந்தனர்.

கரூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கரூர் அருகே செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் செட்டிபாளையம் அணை பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அணைப் பகுதி அருகே உள்ள வேப்ப மரத்தில் ராட்ஷச தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. 100 நாள் வேலை பணியாளர்கள் முட்களை தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெப்பம் தாங்காமல் தேனீக்கள் திடீரென்று பறந்து வேலை செய்து கொண்டிருந்த மக்களை கொட்டியது. இதனால், அங்கிருந்த மக்கள் சிதறி ஓடினர்.

இந்த நிலையல், செட்டிபாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறாளியான கார்த்திக் (47) என்பவர் விரைந்து ஓட முடியாததால் தேனீக்கள் கடுமையாக கொட்டியுள்ளது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் கார்த்தி மற்றும் 10க்கும் மேற்பட்ட மக்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்க நிலையில் சென்ற கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 10க்கும் மேற்பட்ட பெண்கள்மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூறு நாள் வேலைக்கு சென்ற போது ஏற்பட்ட விபரீதத்தால் கிராம மக்கள் சோகமடைந்துள்ளனர்.

Tags

Next Story