கொரோனா சிகிச்சை ஆலோசனை அமைச்சர் பங்கேற்பு

கொரோனா சிகிச்சை ஆலோசனை அமைச்சர் பங்கேற்பு
X
கரூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்துவதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரூர் நகரத்தில் உள்ள பழைய அரசு மருத்துவமனை, தான்தோன்றி மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்பொழுது கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ரெம்டிசிவிர் மருந்து தடையின்றி கிடைப்பதற்கான வழி முறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!