ராணுவ தொழிற்சாலை தனியார் மயம்: தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராணுவ தொழிற்சாலை தனியார் மயம்:  தொழிற்சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்
X

ராணுவ தொழிற்சாலைகள் தனியார்மயமாவதை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கரூர் ஆர்எம்எஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட தலைவர் அண்ணா வேலு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சி கண்டித்து முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் மத்திய அரசின் தனியார் மயமாக்கும் முயற்சியை தடுக்க நினைக்கும் தொழிலாளர்களை அவசரச் சட்டம் என்ற பெயரில் பழிவாங்குவதைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!