கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்
கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது இதன்படி தேர்தல் நடைபெற உள்ள 5 ஒன்றியங்களில் 44,326 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்தல் நடத்தும் பொருட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டார் இதன்படி உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ள ஒன்றியங்கள் ஆன தான்தோன்றி, அரவக்குறிச்சி, கா பரமத்தி, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் 15 உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன.
இந்த 5 ஒன்றியங்களிலும் ஆண் வாக்காளர்கள் 21,261 பேரும், பெண் வாக்காளர்கள் 23,061 பேரும், இதரர் 4 பேர் என மொத்தம் 44,326 வாக்காளர்கள் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu