கரூரில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

கரூரில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
X

கைது செய்யப்பட குமரவேல்.

வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் கைது.

கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது மனைவி செந்தில் ராணி பெயரில் பரமத்தி பகுதியில் 4 வீட்டு மனைகளை வாங்கி இருந்தார். அந்த வீட்டு மனைகளை வரைமுறை படுத்துவதற்காக, க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேலிடம் விண்ணப்பித்தார். மனை வரைமுறைப்படுத்துவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சக்திவேல் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் நேற்று க. பரத்தி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்ற சக்திவேல் அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேலிடம் ரூ 25 ஆயிரம் பணத்தை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குமரவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !