கரூர் காகித ஆலையில் கொரோனா சிகிச்சை மையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
கரூர் காதித ஆலையில் 200 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மய்யத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சமுதாய கூடத்தில் 200 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த சிகிச்சை மைய தொடக்க விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி, ஆட்சியர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் 152 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடனும் , 48 படுக்கைகள் ஆக்ஸிஜன் இல்லாமலும் அமைக்கப்பட்டுள்ளது .
நோயாளிகளுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக 6 மருத்துவர்கள் , 10 செவிலியர்கள் , 4 சுகாதாரப் பணியாளர்கள் , 4 தூய்மைப் பணியாளர்கள் , 1 மருந்தாளுநர் ,ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் .
நோயளிகளுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையிலிருந்து ஆக்ஸிஜன் குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது . கூடுதலாக 7,000 லிட்டர் ஆக்ஸிஜன் கொள்ளவுள்ள 30 உருளைகள் தயார் நிலையில் பயன்பாட்டிற்கு உள்ளது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu