கரூரில் ஜரூராக நடைபெற்ற ஜமாபந்தி : ஆர்வமுடன் மனு வழங்கிய பொதுமக்கள்

கரூரில் ஜரூராக நடைபெற்ற ஜமாபந்தி : ஆர்வமுடன் மனு வழங்கிய பொதுமக்கள்
X

கரூரில் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி.

கரூரில் நடைபெற்ற ஜமாபந்தியில், 30க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தலைமையில் வெள்ளியனை குறுவட்டத்திற்கு உட்பட்ட ஏமூர், தான்தோன்றிமலை, வெள்ளியணை தென்பாகம், வெள்ளியணை வடபாகம், ஜெகதாபி என 5 கிராமங்களுக்கு ஜம்பந்தி நடைபெற்றது.

ஜமாபந்தியின் 3 வது நாளான இன்று, பொதுமக்களின் மனுக்கள் மீதான விசாரணையில், கரூர் வட்டாட்சியர் சக்திவேல், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், வெள்ளியணை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் டி.பாலசக்கரபாணி மற்றும் அனைத்து துறை வருவாய் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இன்று 30க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஜமாபந்தியின் கடைசி நாளான நாளை, கோரணக்கல்பட்டி, காக்காவாடி, திருமாநிலையூர், மூக்கனாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி, புத்தாம்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி