கரூர் அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம்

கரூர் அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேரம் தடையில்லா  மின்சாரம்
X

கரூர் அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, தனி மின்பாதை, தனி துணைமின்நிலையம் அமைக்கப்பட்டது.

கரூர் அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தனி மின் வட்டப் பாதை அமைக்கப்பட்டு, துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது

.கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில். கொரோனா நோயாளிகள் உள்பட 1500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த கல்லூரிக்கு தற்சமயம் பாலம்மாள்புரம் துணை மின். நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது.

பாலம்மாள்புரம் துணை மின் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் மின் வினியோகம் வழங்கப்படுவதால், அந்த குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் தடை ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து எஸ் வெள்ளாளப்பட்டி என்ற இடத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை தனி மின்பாதை அமைக்கும் வகையில் துணை மின் நிலையம் ஒன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டது.

அங்கிருந்து சுமார் 3.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை 90 மின்கம்பங்கள் இணைக்கப்பட்டு தடையற்ற மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக 1.5 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம், மற்றும் தனி மின் வட பாதை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story