/* */

கரூரில் ஊரடங்கு தடை மீறல் : 100 கடைகளுக்கு சீல்

கரூரில் ஊரடங்கை மீறிய 100 கடைகளை, நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

கரூரில் ஊரடங்கு தடை மீறல் : 100 கடைகளுக்கு சீல்
X

கரூரில் ஊரடங்கு விதிகளை மீறியதாக நூறு கடைகளை அடைத்து நகராட்சி அதிகாரிகள்  சீல் வைத்தனர்.

கரூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கியதாக வந்த புகாரையடுத்து நூற்றுக்கும் அதிகமான மின் பொருள் விற்பனை கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள முருகநாதபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வட இந்தியர்கள் மின் பொருள் விற்னை கடைகளை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறையாத காரணத்தால் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. பிற மாவட்டங்களில் மின் பொருள் விற்பனை கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள முருகநாதபுரம் பகுதியில் உள்ள மென்பொருள் விற்பனை கடைகள் பல திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அலுவலர்களுக்கு புகார் வந்தது.

இதையடுத்து இன்று கரூர் நகராட்சி அலுவலர்கள் முருகநாதபுரம் பகுதியில் உள்ள நூற்றுக்கும் அதிகமான கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் அந்தக் கடைகள் உள்ள வீதிக்குள் யாரும் நுழையாதவாறு சாலையின் இருபுறங்களிலும் தடுப்புக் கட்டைகளை வைத்து அடைத்தனர்.

தொடர்ந்து அரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் அந்த கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Jun 2021 11:23 AM GMT

Related News