கரூரில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த அமைத்த 119 குழுக்கள் பணிகளை துவங்கியது
.கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு ஏறபாடு செய்வது, நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வருவாய், காவல், உள்ளாட்சித் துறை அலுவலர்களைக் கொண்ட 119 மண்டல அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, வீட்டுத்தனிமையில் இருக்கும் கொரோனா தொற்றாளர்களுக்கு உதவி செய்யவும், பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்து, அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியில் செல்வதைத் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை இந்த மண்டல அளவிலான குழுக்கள் மேற்கொள்ள உள்ளன.
இன்று கரூர் கோட்டாட்சியர் அலுவவலகத்தில் கரூர் வட்டத்தில் செயல்படக் கூடிய 28 மண்டல அளவிலான கண்காணிப்பு குழுவினருக்கு முறைப்படி ஆணைகள் வழங்கப்பட்டது.இதையடுத்து, 28 மண்டல கண்காணிப்பு குழுக்களும் கரூர் வட்டத்தில் தங்களது பணிகளை தொடங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu