கரூர் மாணவி தேசிய அளவிலான கபாடி போட்டியில் வெற்றி எம்எல்ஏ வாழ்த்து

கரூர் மாணவி தேசிய  அளவிலான கபாடி போட்டியில் வெற்றி   எம்எல்ஏ வாழ்த்து
X

தேசிய அளவிலான கபாடி போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவியை பாராட்டுகிறார் எம்எல்ஏ இளங்கோ.

கரூர் கல்லூரி மாணவி கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கபாடி போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்றுள்ளார்

தேசிய அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்ற கரூரைச் சேர்ந்த மாணவியை எம்எல்ஏ இளங்கோ பாராட்டினார்.

கரூர் மாவட்டம் தென்னிலை அருகேயுள்ள தெற்று ஊராட்சியைச் சேர்ந்தவர் சுபகீதா. கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை ௨ ம் ஆண்டு பயின்று வருகிறார். கபாடி வீராங்கனையான இவர் தமிழக கபாடி அணியில் உள்ளார். அண்மையில் கோவாவில் தேசிய அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில், சுபகீதா உள்பட தமிழக கபாடி அணி கலந்து கொண்டது. இறுதிப் போட்டியில், தமிழக அணி அரியானா அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்தப்போட்டியில், தமிழ்நாடு அணி வெற்றி பெற்று தங்க கோப்பையை வென்றது. தமிழக அணியில் இடம் பெற்று வெற்றி வாகை சூடிய கரூர் கபடி வீராங்கனை சுபகீதாவை, அரவக்குறி்ச்சி தொகுதி எம்எல்ஏ- பி.ஆர். இளங்கோ நேரில் சந்தித்து பாராட்டினார்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!