கரூர் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்

கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தை இணைக்கும் திருச்சி, திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் இன்று முதல் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அருகாமை மாவட்டங்கள் வழியாக மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
கருஇந்த நிலையில், கரூர் மாவட்டத்தை இணைக்கும் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி இ - பாஸ் மற்றும் இ - பதிவு இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தை இணைக்க கூடிய திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய எல்லைகளான வெள்ளியணை -கூடலூர், குளித்தலை - முசிறி, நங்கவரம், மாயனூர் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu