கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியில் 3,19,816 ரேஷன் கார்டுக்கு தலா 4 கிலோ அரிசி : உதயநிதி ஸ்டாலின் வழங்கல்

கரூர் மாவட்டத்தில்  4 தொகுதியில் 3,19,816 ரேஷன் கார்டுக்கு தலா 4 கிலோ அரிசி : உதயநிதி ஸ்டாலின் வழங்கல்
X
கரூர் மாவட்டத்தில்3 லட்சத்து 19  ஆயிரத்து   816  பேருக்கு தலா ௪  கிலோ அரிசி வழங்கும் பணியை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 19 ஆயிரத்து 816 ரேஷன் கார்டுகளுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் பணியை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

கரூரில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியிலும் உள்ள 3 லட்சத்து 19 ஆயிரத்து 816 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாவட்ட செயலாளரும், மின் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கொரனோ நிவாரணம் 4 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார். ஏற்கனவே 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த தவணை இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் வழங்கப்படும்.

கொரனோ தொற்று அதிமாக பரவி வந்த சூழ்நிலையில் அமைச்சர்களின் சீரிய முயற்சியால் கொரனோ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்னும் 15 நாட்களுக்கு பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசிடமிருந்து பெற்று தடுப்பூசி செலுத்தப்படும் இந்தியாவிலேயே தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி முன் மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!