பழைய பஞ்சு கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதம்

பழைய பஞ்சு கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதம்
X

பரமத்தி அருகே பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்

தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எரிந்து போன பொருட்களின் சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை

கரூர் அருகில் உள்ள க.பரமத்தி அடுத்த முன்னூர் அருகே தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் ஏற்பட்ட திடீர் தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைத்துறையினர் அணைத்தனர்.

க.பரமத்தி ஒன்றியம் முன்னூர் அருகே மோளபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு இன்று திடீரென தீப்பற்றி எறிந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் க.பரமத்தி போலீசாருக்கும், தீயணைப்பு துறை ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தீ வேகமாக பரவியதால் தீப்பற்றிய இடத்தில் அப்பகுதியே பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து விரைந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் கரூர் தீயணைப்புத் துறை வீரர்கள் ஆகியோர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எரிந்து போன பொருட்களின் சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
photoshop ai tool