கல்வித் துறை உதவியாளர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு

கல்வித் துறை உதவியாளர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு
X

கரூரில் திருட்டு நடந்த வீடு

கரூரில் கல்வித்துறை உதவியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் மேற்கூர் பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (58) கரூர் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளர் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி பவுன் (50) தளவாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மகன் விக்னேஷ் கண்ணன் (25) மகள் ஜீவிதா (26).

இன்று காலை 10.00 மணி அளவில் லோகநாதன் மருத்துவமனைக்கும், பவுன், விக்னேஷ் கண்ணன் மற்றும் ஜீவிதா ஆகியோர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையத்தில் உள்ள பவுன் அம்மா பாப்பாயி வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

லோகநாதன் மருத்துவமனைக்கு சென்று விட்டு, மாலை வந்து பார்த்போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 20 சவரன் நகைகள் திருடுபோயிருந்தன. அதிர்ச்சியடைந்த லோகநாதன் வாங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்

சம்பவ இடம் சென்று வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!