கரூரில் 87 விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் ஆற்றில் கரைப்பு
கரூரில் காவிரியில் கரைக்கப்படும் விநாயகர் சிலை.
கரூர் மாவட்டத்தில், இந்து முன்னணி சார்பில் 87 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் போலீசார் பாதுகாப்புடன் இன்று மாலை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவான இன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
கரூர் நகரில் நேற்று முன்தினம் இரவு இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்க முயன்றபோது, போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் ஒரு விநாயகர் சிலை சேதம் அடைந்தது இரண்டு விநாயகர் சிலைகளை போலீசார் கைப்பற்றி கரூர் நகரில் உள்ள ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று. காலை இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் 87 இடங்களில் கோயில்களின் முன்பு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. பொதுமக்கள் வழிபட்டனர்.
தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில். கரூர் நகரம், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, தென்னிலை, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மாலையே எடுக்கப்பட்டு, டிராக்டர் போன்ற வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் வேலாயுதம்பாளையம், வாங்கல், ராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிபாட்டுக்குப் பிறகு கரைக்கப்பட்டது.
சிலைகள் ஆற்றில் கரைக்கும் வரை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu