/* */

தேர்தல் நடத்தை எதிரொலி 37,50,000 பறிமுதல்

கரூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 37,50,000 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தேர்தல் நடத்தை எதிரொலி 37,50,000 பறிமுதல்
X

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வைரமடை என்ற இடத்தில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையில் 37,50,000 ரூபாய் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப எடுத்துச் சென்றதாக அந்த வாகனத்தில் இருந்தவர்கள் கூறினர். ஆனால் அந்த பணத்தை எடுத்துச் செல்வதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

உரிய விசாரணைக்கு பிறகு அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்ப சென்ற வாகன ஓட்டுநர் கோபால் மற்றும் பணம் நிரப்பும் அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வாகனத்திற்கு பாதுகாவலராக வந்த காவலர் முனியப்பன் ஆகியோரிடம் தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 April 2021 3:11 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்