/* */

கரூரில் சாயப்பூங்கா; அமைச்சர்கள் உறுதி

கரூரில் சர்வதேச ஜவுளி கண்காட்சியை நடத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கரூரில் சாயப்பூங்கா; அமைச்சர்கள் உறுதி
X

கரூரில் உள்ள டெக்ஸ்டைல் பார்க்கில் ஆய்வு செய்த அமைச்சர்கள் காந்தி, செந்தில்பாலாஜி. 

கரூரில் சர்வதேச ஜவுளி கண்காட்சியை நடத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தெரிவித்தனர்.

கரூரில் உள்ள ஜவுளி பூங்காவை இன்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஜவுளி தொழில் முனைவோர், நெசவாளர்கள. ஆகியோருடன் ஜவுளி தொழில் மேம்பாட்டுக்காக கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பேசுகையில், கரூரில் ஜவுளி பூங்கா மூலம் 450 கோடி வியாபாரம் நடைபெறுகிறது. 4,500 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஜவுளி உற்பத்தி மேம்பாட்டுக்காக சாயப் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொழில் முனைவோர் தரப்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், கலைஞரையும் அண்ணாவையும் மிஞ்சும் வகையில் செயல்பட்டு வருகிறார். நெசவாளர் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்றார்.

மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், கரூரில் மக்களுடைய எண்ணங்களையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் சாயப்பூங்கா அமைக்கும் பணி முன்னெடுக்கப்படும். சர்வதேச ஜவுளி கண்காட்சியை கரூரில் நடத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் நேரத்தில் கரூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். அதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என பேசினார்.

நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையர் பீலாராஜேஸ் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், மொஞ்சனூர் இளங்கோ, சிவகாம சுந்தரி, அரசு அதிகாரிகள், ஜவுளி நிறுவன ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மலைக்கோவிலூர் கிராமத்தில் மூடப்பட்ட நூற்பாலை சாய பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

பின்னர் தனியார் ஜவுளி நிறுவனத்தில் வரும் மறு சுழற்சி முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து வடிவேல் நகரில் செயல்பட்டுவரும் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் பார்வையிட்டு நெசவாளர்களின் குறைகளை அவர்கள் கேட்டறிந்தனர்.

Updated On: 20 July 2021 3:45 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்