கொரோனா தொற்றால் டிஎஸ்பி உயிரிழப்பு..!

கொரோனா தொற்றால் டிஎஸ்பி உயிரிழப்பு..!
X

கரூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த டிஎஸ்பி ராஜலிங்கம் உயிரிழந்தார்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விரல்ரேகை புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் ராஜலிங்கம். 45 வயதான இவர் கரூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இன்னும் கரூரில் பணிக்கு சேராத நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

டிஎஸ்பி ராஜலிங்கம் கரூர் மாவட்டம் குளித்தலையை அருகில் உள்ள தெற்கு மயிலம்பாடியைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஷோபனா. இவருக்கு 8 ம் வகுப்பு படிக்கும் லட்சுமி பிரியா என்ற மகளும் 2 ம் வகுப்பு படிக்கும் தினகர் என்ற மகனும் உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!