சர்வதேச போதை விழிப்புணர்வு பிரச்சாரம் கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு ஏற்பாடு
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வாகன ஓட்டிகளிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வாகன ஓட்டிகளிடம் போதையால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
கரூர்:
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில், சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில், நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வாகன ஓட்டிகளிடம் போதையால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது இடங்களில் ஓட்டினர்.
போதைப் பொருட்களை கடத்துவதோ, வைத்திருப்பதோ, விற்பதோ, உண்டாக்குவதோ சட்டப்படி குற்றமாகும். இதற்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும், குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும். கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் குறித்து 24 மணி நேர புகார் எண் 10581 கட்டணமில்லா தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu