கிணற்றில் மூழ்கி பள்ளி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி பள்ளி  2 சிறுவர்கள் உயிரிழப்பு
X

கிணற்றில் இருந்து மீட்கப்படும் சிறுவர்களின் உடல்கள்.

கரூர் அருகே வாங்கலில் கிணற்றுக்குள் தவறி விழுந்து 2 சிறுவர்கள் இறந்தனர்.

கரூர் அருகே 5 ம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்கள் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியல் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டம் வாங்கல் அருகேயுள்ள என். புதூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது உறவினர் சக்திவேல் இருவரும் அந்த பகுதியில் உள்ள சாயப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். கோவிந்தராஜன் மகன் தங்கதுரை, சக்திவேல் மகன் சுஜித் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து சிறுவர்கள் இருவரையும் காணவில்லை. இது குறித்து பெற்றோர் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்திருந்தனர்.

இந்நிலையில் என் புதூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சிறுவர்கள் இருவரும் சடலமாக கிடந்ததை வயலுக்கு வேலைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டனர். இதுகுறித்து வாங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!