/* */

திமுக வெற்றி: 100 தொண்டர்கள் முடி காணிக்கை

திமுக வெற்றி: 100 தொண்டர்கள் முடி காணிக்கை
X

கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றதையடுத்து 100 க்கும் அதிகமான திமுகவினர் முடிகாணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது

இந்நிலையில் கரூர் தாந்தோன்றிமலையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள், கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டதை நிறைவேற்றும் விதமாக, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தினர்.

முடி காணிக்கை செலுத்தி கொண்ட திமுக தொண்டர்கள் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மூன்று சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களையும் வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மேற்கு நகர திமுக பொறுப்பாளர் தாரணி சரவணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட செயலாளர் அம்பிகாபதி செய்திருந்தார்.

Updated On: 4 May 2021 3:09 AM GMT

Related News