விஜயகாந்த் 69வது பிறந்த தினவிழா : 69 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

விஜயகாந்த் 69வது பிறந்த தினவிழா : 69 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

கரூரில் 69 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி விஜயகாந்தின் பிறந்த நாளை கொண்டாடும் தேமுதிகவினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 69வது பிறந்த நாளை கரூரில் தேமுதிகவினர் 69 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடினர்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 69வது பிறந்த தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூரில், தேமுதிக கரூர் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தான்தோன்றி மலையில் தேமுதிக கொடி ஏற்றி வைத்து அங்கு கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த 69 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி பொதுமக்கள், மற்றும் கட்சியினருக்கு வழங்கினர்.

தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Tags

Next Story