தலித் வீட்டில் உண்டு, உறங்கிய அண்ணாமலை

தலித் வீட்டில்  உண்டு, உறங்கிய அண்ணாமலை
X

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பரப்புரை ஈடுபட்டுள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று இரவு தலித் ஓருவர் வீட்டில் தங்கினார். அவர் வீட்டிலேயே நேற்று இரவு உணவு அருந்தி அங்கேயே தூங்கினார்.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேட்டமங்கலம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு வசிக்கும் தலித் மக்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பாலு என்பவரின் மகள் அண்ணாமலையை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.


அப்பொழுது பிரச்சாரத்தில் இருப்பதால் பிறகு வருகிறேன் என்று கூறிவிட்டு அண்ணாமலை சென்றார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பாலுவின் வீட்டிற்கு அண்ணாமலை வந்தார். அண்ணாமலை வந்ததைக் கண்டு பாலு மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திக்குமுக்காடி போயினர். அப்போது, உங்கள் இல்லத்தில் தங்க வந்திருப்பதாகக் கூறி, டீ சர்ட் அணிந்து கொண்டு அந்தக் குடும்பத்தில் உடனே தரையில் அமர்ந்து உணவு அருந்தினார் மற்றும் நேற்று இரவு அவர்களுடைய இடத்திலேயே படுத்து உறங்கினார்.

இன்று அதிகாலை அண்ணாமலை தன் கைப்பட காபி தயாரித்து பாலு குடும்பத்தினருக்கு அளித்தார். பின்பு அந்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்துவிட்டு, இன்றைய தினத்துக்கான பரப்புரையில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். பரப்புரையில் இருந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை தலித் ஒருவர் வீட்டில் உணவருந்தி உறங்கியது அந்த பகுதி மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india