கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் மோசடி? வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

வங்கியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கரூர் அருகே ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் மோசடி நடந்துள்ளதாக கூறி விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டனர். மாங்காசோளிபாளையத்தில் ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக அதிமுகவை சேர்ந்த கருமணன் என்பவரும், செயலாளராக துரைசாமி என்பவரும், கம்ப்யூட்டர் ஆபரேட்டராக சதீஷ்குமார் என்பரும் உள்ளனர்.
இந்த வங்கியில் 1,275 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 205 பேருக்கு கடந்த ஆட்சியில் பயிர்கடன் தள்ளுபடி ஆனது. இதில் 15 பேருக்கு இதுவரை பயிர் கடன் தள்ளுபடி ஆகவில்லை. இதில் முறைகேடு நடத்துள்ளதாக்க் கூறி சுமார்50 க்கும் மேற்பட்டோர் இன்று வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூட்டுறவு துறை அதிகாரி ரமேஷ் வங்கிக்கு சென்று ஆய்வு செய்தார். அதில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதில் சமாதானமடைந்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu