கரூர் மாவட்டத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கரூர் மாவட்டத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

மாதிரி படம் 

கரூர் மாவட்டத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்.

கரூர் மாவட்டத்தில் நாளை காலை 9.30 மணி முதல் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) பொதுமக்களுக்கு போடப்பட உள்ளது. தடுப்பூசி போடும் இடங்களின் விவரம்:

1. கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி (400பேருக்கு)

2. கரூர் நகராட்சி CSI பள்ளி , டவுன் போலீஸ் ஸ்டேசன் அருகில் (400 பேருக்கு).

3. கரூர் நகராட்சி RTO அலுவலக வளாகம் ( ஆட்டோ , டாக்ஸி.மினிபஸ் ஓட்டுனர்கள் 400 பேருக்கு)

4. கரூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் , தோரணக்கல்பட்டி (சங்கத்தில் பணிபுரியும் 150 பேருக்கு)

5. கரூர் நகராட்சி திருக்காம்புலியூர் அரசு ஆரம்பப்பள்ளி ( 400 பேருக்கு)

6. தாந்தோணி 300 கோவிஷீல்ட் நூல் வணிகர்கள் சங்க கட்டிடம் சின்னான்டாங்கோவில் ரோடு ( நூல் வணிகர்கள் 300 பேருக்கு)

7. செல்லாண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , பள்ளபாளையம் ஊராட்சி (400 பேருக்கு)

8. குளித்தலை பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி , புதுப்பட்டி (400 பேருக்கு).

9. அரவக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி , கோவிலூர் ( 400 பேருக்கு).

10. கடவூர் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி , புதுவாடி , கீரனூர் பஞ்சாயத்து (400 பேருக்கு).

11 கரூர் பெரியகாளிபாளையம் துவக்கப்பள்ளி , நெரூர் வடபாகம் ( 400 பேருக்கு).

Tags

Next Story
ai in future agriculture