கரூர் மாவட்டத்தில் 540 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கரூர் மாவட்டத்தில் 540 மையங்களில்  கொரோனா தடுப்பூசி முகாம்
X

மெகா தடுப்பூசி முகாமை பார்வைடுகின்றறர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மருத்து மையங்களுக்கான கண்காணிப்பு  அலுவலர் வீர்ராகவ ராவ் ஆகியோர்

மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 540 இடங்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று 30 லட்சம் பேருக்கு கொரோனா மெகாட்ட தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது.

அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் 540 இடங்களில் தடுப்பூசி ஊசியை செலுத்தும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தான்தோன்றிமலை அரசு பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதேபோல, தடுப்பூசி முகாம்களுக்கான கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்டம் முழுவதும் 540 இடங்களில் இந்த தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டு உரிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் வசதிக்காக பத்துக்கும் மேற்பட்ட மொபைல் வாகனங்கள் மூலம் அவர்களின் இல்லங்களுக்கு சென்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இந்த முகாம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் பேனர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தபட்டிருந்தது. ஒலிபெருக்கிகள் மூலம் தடுப்பூசி முகாம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது . மாவட்டத்திலுள்ள 540 இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு ஊசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!