கொரோனா பரவல்: எம்பி ஜோதிமணி கலெக்டருடன் ஆலோசனை
கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் எம்பி ஜோதிமணி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கரூரிலும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவை கரூர் எம்பி ஜோதிமணி இன்று நேரில் சந்தித்தார். அப்போது,
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள், தொற்று பாதித்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை உள்ளிட்ட வசதிகளை அதிகப்படுத்துவது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பை அதிகரிப்பது உள்ளிட்டவைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சமூக பங்களிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.தொற்று தீவிரமடையத் துவங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே உயிரிழப்புகளைத் தடுக்க உதவும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதால், மக்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என்று எம்பி ஜோதிமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu