கரூரில் கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு

கரூரில் கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு
X

கரூரில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் பிரபு சங்கர், எஸ்பி. சுந்தரவடிவேல் உள்ளிட்டோர் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.

கரூரில் கொரோனா வைரஸ் பரவல் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் இரு சக்கரவாகன பேரணியில் ஈடுபட்டனர்.

கரூர் ரயில் நிலையத்தில் கொரோனா 3ம் அலை பரவல் தடுப்பு முன் எச்சரிக்கையாக ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் "கொரோனா இல்லா கரூர்" தலைப்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து, தானும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி ரயில் நிலையத்தில் துவங்கி, சர்ச் கார்னர், திண்ணப்பா திரையரங்கம், மனோகரா கார்னர், ஜவகர் பஜார் வழியாக திருவள்ளுவர் திடலை வந்தடைந்தது.

தொடர்ந்து திருவள்ளுவர் திடலில் "கைகழுவு - கவசமிடு - விலகியிரு" என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கைகழுவி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!