கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம்: முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம்

கருத்து கேட்பு கூட்டத்தில் முகிலனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள்.
கரூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் செயல்பட அனுமதி வழங்குவது தொடர்பான மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் தென்னிலையில் இரண்டு கல்குவாரிகள் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்துகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள், வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் ஆண்டுக்கு அரசுக்கு பல லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது கரூரில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறவினர்களுக்கு கல்குவாரிகள் அமைக்க அனுமதி அளித்து அதன் மூலம் பல லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறியதை மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் பலர் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை சூழ்ந்து கொண்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் பெயரை எப்படிக் கூறலாம் என கடுமையாக பேசினார்.
இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அவர்களை அமர வைத்தனர் தொடர்ந்து கல் குவாரிகள் அமைப்பது தொடர்பாக ஆதரித்தும் எதிர்த்தும் தொடர்ந்து மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இதனால் அவ்வப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பேசுகையில் மக்கள் கூறிய கருத்துகளை அரசுக்கு முறைப்படி தெரியப்படுத்த உள்ளதாக கூறி சென்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தமிழக முதல்வர் தெரிவித்த கருத்துக்களை மக்கள் கருத்து கூட்டத்தில் தெரிவித்த எனக்கு எனக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் வருகிறது. மேலும் இரண்டு குவாரிகளில் அமையும் இடத்தைச் சுற்றிலும் அமராவதி நொய்யல் மற்றும் ஆத்துப்பாளையம் அணை உள்ளதால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இரண்டு குவாரிகள் அமைப்பதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது என பேட்டி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu