ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் பேருந்து: இந்திய தொழில் கூட்டமைப்பு வழங்கியது
கரூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய நவீன பேருந்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் பிரசாந்த் வடநேரே ஆகியோரிடம் இன்று வழங்கினார்.
ஆக்சிஜன். வசதியுடன். கூடிய 7 இருக்கை வசதிகள், 3 படுக்கை வசதிகளுடன் வடிமைக்கப்பட்ட இந்த பேருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன். வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்க காலதாமதம் ஆகும்போது அவர்கள் இந்த பேருந்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட உள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2கோடியே 80 லட்சத்தை வழங்கினர். பின்னர், செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளிக்கையில், தமிழக அரசு கொரோனா தொற்றால் உயிரழந்தவர்களின் எண்ணக்கையை மறைக்கிறது என எதிர்கட்சி தலைவர் எட்படாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், கொரோனா சிகிச்சை அளிப்பதில் தமிழக அரசு ஒளிமறைவற்ற வெளிப்படையாக இயங்கி வருகிறது. அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 444 பேர் மறைக்கப்பட்டு பின்பு எப்படி வெளியே வந்த்து என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரயும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu