10 தொகுதிக்கு மேல் பாஜக வெற்றி : அண்ணாமலை நம்பிக்கை

10 தொகுதிக்கு மேல் பாஜக வெற்றி  :  அண்ணாமலை நம்பிக்கை
X
பாஜக 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளரிடம் கூறினார்.

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று வாக்கு எண்ணும் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது. தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் முழுமையாக கடைபிடிக்க உள்ளோம் வெற்றி விழா நடத்தக்கூடாது என அறிவித்துள்ளதை முழுமையாக கடைபிடிக்கிறோம்.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை மூலம் மேலும் அதிகம் மேலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் ஆகி விடக்கூடாது என்பதற்காக அரசு தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை 100% கடைபிடிக்க உள்ளோம்.

அரவக்குறிச்சி தொகுதி மட்டுமல்ல கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் பாஜக அதிமுக கூட்டணி வெற்றி பெறும் அதிமுக ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதற்காக பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு எக்ஸிட் போல் கருத்து கணிப்பில் பெண்கள் வாக்கை தவறாக கணித்ததால் அந்த குழப்பம் வந்தது. இந்த முறை எக்ஸிட் போல் கருத்து கணிப்பில் பெண்கள் வாக்கை சரியாக கணித்து உள்ளனர். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பாஜக பத்து இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பேட்டி அளித்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்