பாஜக அதிமுக இரட்டை என்ஜின் ரயில்: அண்ணாமலை

பாஜக அதிமுக இரட்டை என்ஜின் ரயில்: அண்ணாமலை
X
அதிமுகவும் பாஜகவும் இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் போல அரவக்குறிச்சி வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறினார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டி போட்டியிடுகிறார்.

இன்று காலை அண்ணாமலை பாஜக நிர்வாகிகள் புடைசூழ சைக்கிளில் வந்து அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 200 தொகுதிகளில் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி தமிழகத்தில் இறையாட்சியை ஏற்படுத்துவார். இதற்கு அரவாக்குறிச்சி முக்கிய திருப்புமுனையாக இருக்கும். திமுகவினர் அராஜகமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முடிவு கட்டுவோம். திமுக, பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் அலை உருவாகி உள்ளது. எனவே கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி நண்பர்கள் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வார்கள் என பேட்டியளித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!