நில பிரச்னையில் வாயில்லா ஜீவன் மீது தாக்குதல்; விவசாயி போராட்டம்

நில பிரச்னையில் வாயில்லா ஜீவன் மீது தாக்குதல்;  விவசாயி போராட்டம்

கரூரில் நிலப் பிரச்னையில்,  கன்று குட்டி மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கப்பட்ட கன்று குட்டியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய குடும்பத்தினர்.

நில பிரச்னையில் கன்று மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய கோரி தாக்கப்பட்ட கன்று குட்டியுடன் விவசாயி போராட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கருப்பசாமி என்பவருக்கும் பாதை தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது.

நல்லசாமி இது தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து நில அளவை செய்து பாதையை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அரவக்குறிச்சி வட்டாட்சியரும் நில அளவையரும் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நில அளவை செய்து இருதரப்பிற்கும் ஈடு இடத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால் கருப்பசாமி அரசு அதிகாரிகள் அளவீடு செய்த இடத்திலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், நல்லசாமியின் கன்றுக்குட்டி கருப்புசாமி இடத்திற்கு சென்றதாக கூறி அப்புசாமி அந்த கன்று குட்டியை காலில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகார் அரவக்குறிச்சி காவல் நிலைத்தில் நல்லசாமி அளித்துள்ளார். காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காயம்பட்ட கன்றுக்குட்டியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அதிகாரியிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், கன்றுகுட்டியை தாக்கிய நபர்கள் மீது நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அரசு அதிகாரிகள் அளவீடு செய்து அளித்த நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றாத கருப்புசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story