அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் ஜெயந்தி மணிகண்டன் தீவிர வாக்குசேகரிப்பு

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் ஜெயந்தி மணிகண்டன் தீவிர வாக்குசேகரிப்பு
X

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ஜெயந்தி.

அரவக்குறிச்சி பேரூராட்சியில் 7வது வார்டு திமுக வேட்பாளர் ஜெயந்தி மணிகண்டன் தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சியில் 7-வது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெயந்தி மணிகண்டன் சின்ன பள்ளிவாசல் பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது வீடு வீடாக நடந்து சென்றும் கடைவீதிகளில் உள்ள வாக்காளர்களிடம் திமுக அரசு செய்த சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வழங்கியும் வாக்குகள் சேகரித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்