வயது மூப்பால் அவதிப்பட்ட 90 வயது முதியவர் விஷமருந்தி உயிரிழப்பு

வயது மூப்பால் அவதிப்பட்ட 90 வயது முதியவர் விஷமருந்தி உயிரிழப்பு
X

பைல் படம்.

கரூர் தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த 90 வயது முதியவர் வயது மூப்பு அவதியால் விஷமருந்தி உயிரிழந்தார்.

புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (90 ). இவர் வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டார். அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் முத்துசாமி அரளி விதையை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி முத்துசாமி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!