ஏலச் சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி

ஏலச் சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி
X
கரூர் அருகே ஏலச் சீட்டு நடத்தி சுமார் 50 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டு தலைமறைவான நபர்.

கரூர் மாவட்டம், தோகைமலையை அடுத்துள்ளது கீழவெளியூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியுள்ளதாவது, கீழவெளியூரில் ஏலச் சீட்டு நடத்தி வரும் சரவணனிடம் கீழவெளியூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் 1 லட்ச ரூபாய் ஏலச் சீட்டு போட்டுள்ளனர். மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் கட்டி வந்துள்ளனர். மாதத்திற்கு 5 சீட்டுகள் என 100 பேர் ஏலச் சீட்டில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் சீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டும், ஏலம் எடுத்தவர்களுக்கு சீட்டுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று கேட்டால் மிரட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக தோகைமலை காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்த உரிய விசாரணை நடத்தி, ஏலச் சீட்டு நடத்தி தலைமறைவாக உள்ள சரவணனிடமிருந்து பொதுமக்கள் செலுத்திய பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil