ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளை பொருள்கள் 29 லட்சத்துக்கு ஏலம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளை பொருள்கள் 29 லட்சத்துக்கு ஏலம்
X

பைல் படம்.

சாலைபுதூரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஏங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை ஆகியவை ஏலம் விடப்பட்டது.

கரூர் மாவட்ட எல்லையில் உள்ள சாலைப்புதூரில் அரசு ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரம்தோறும் ஏலத்தில், தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் க.பரமத்தி மற்றும் கரூர் ஒன்றிய பகுதிகளான நொய்யல், மரவாபாளையம், வேட்டமங்கலம், குந்தாணி பாளையம் தவுட்டுப்பாளையம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் நிலத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு வேளாண் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 46.931குவிண்டால் கிலோ எடை கொண்ட 16ஆயிரத்து 573தேங்காய் விற்பனைக்கு வந்தது.

இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.30.69க்கும், குறைந்த விலையாக ரூ. 23.15க்கும், சராசரி விலையாக ரூ.28.65க்கும் என ரூ. 1லட்சத்து 28ஆயிரத்து 536க்கு விற்பனையானது. அதேபோல் 125.87குவிண்டால் எடை கொண்ட 257மூட்டை தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.109.79க்கும், குறைந்த விலையாக ரூ.96.26க்கும், சராசரி விலையாக ரூ.102.85க்கும், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.100.35க்கும், குறைந்த விலையாக ரூ.66.96க்கும், சராசரி விலையாக ரூ. 91.30க்கும் என ரூ. 11லட்சத்து 38ஆயிரத்து 112க்கு விற்பனையானது. அதேபோல் 93.93 குவிண்டால் எடை கொண்ட 127மூட்டை எள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதில் வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.106.99க்கும், குறைந்த விலையாக ரூ.76.99க்கும், சராசரி விலையாக ரூ.98.99க்கும்என ரூ.8லட்சத்து 73 ஆயிரத்து 658க்கு விற்பனையானது. அதேபோல், 116.41 குவிண்டால் எடை கொண்ட 336 மூட்டை நிலக்கடலைக்காய் ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.72.56-க்கும், குறைந்த விலையாக ரூ.60.06-க்கும், சராசரி விலையாக ரூ.68.16க்கும் என ரூ.7லட்சத்து 64ஆயிரத்து 259க்கு விற்பனை ஆனது. ஒட்டு மொத்தமாக இந்த வாரம் நடந்த ஏலத்தில் வேளாண் பொருட்கள் ரூ.29 லட்சத்து 04 ஆயிரத்து 565க்கு விற்பனை ஆனது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!