140 தொகுதியில் வெற்றி உறுதி, தனி மெஜாரிட்டியில் அதிமுக ஆட்சி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேட்டி

140 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனி மெஜாரிட்டியுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் வாக்கு எண்ணிக்கை மையத்தை கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது.

பாதுகாப்பு பணிகள் சிறப்பாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி முகவர்களின் கண்காணிப்பில் உள்ளது.

தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் ஆகியோரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது

திமுகவினர் தோல்வி பயத்தால் கன்டெய்னர் செல்வதை குறையாக கூறி வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளதால் கன்டெய்னர் செல்வதை கூட அவர்கள் குறை சொல்வார்கள்.

தேர்தலுக்குப் பிறகு உள்ள கருத்துக் கணிப்பின்படி அதிமுக 140 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வராது என்று கருத்துக் கணிப்பில் கூறினார்கள்.

ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தது. அதேபோல மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கவும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!