கரூரில் நாளை பொது போக்குவரத்து தொடக்கம்: தயார் நிலையில் 205 பேருந்துகள்

கரூரில் நாளை பொது போக்குவரத்து தொடக்கம்:  தயார் நிலையில் 205 பேருந்துகள்
கரூரில் நாளை பொது போக்குவரத்து தொடக்கம்

கரூர் மண்டலத்திற்கு உட்பட்ட நான்கு பனிமனையில் இருந்து நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் 205 பேருந்துகளை தயார் செய்யும் பணியில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது போக்குவரத்து கடந்த 55 நாள்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் பொது முடக்கமும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. தொற்று குறைந்து வந்ததையடுத்து 27 மாவட்டங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கும் தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, போக்குவரத்து கழக கரூர் மண்டலத்திலுள்ள கரூரில் இரண்டு கிளைகள், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய நான்கு கிளைகளில் உள்ள இயக்கப்படும் 205 பேருந்துகளை சரி செய்யும் பணியில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதன் செயல்பாடுகளை பரிசோதித்து வருகின்றனர். அனைத்து பேருந்துகளும் வாட்டர் வாஷ் செய்யப்பட்டு, பிரேக் உள்ளிட்ட முக்கிய பாகங்களின் செயல்பாடுகளை மெக்கானிக்குகள் தீவிரமாக சரி செய்து வருகின்றனர். நாளை காலை 6 மணி முதல் பேருந்துகளை இயங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags

Next Story